• Jul 07 2024

இந்தியன் 2 படத்திற்கு தடையா? விளக்கமளிக்க கோரி நீதிமன்றம் படக்குழுவுக்கு நோட்டீஸ்!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் புதிதாக வரும் திரைப்படங்களுக்கு பல்வேறு பட்ட காரணங்களால் தடைகள் , சர்ச்சைகள் உண்டாக்குவது வழக்கமாவே உள்ளது. அவ்வாறே சமீபத்தில் வெளியாகி உள்ள இந்தியன் 2 படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.


பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வரவிருக்கின்ற பாண் இந்தியா திரைப்படம் இந்தியன் 2 ஆகும்.இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் குறித்த படத்தில்  கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.   


இந்த நிலையிலேயே  இந்தியன் - 2 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மஞ்ச வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவுக்கு  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா நிறுவனம் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்க வேண்டும் என  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Advertisement

Advertisement