• Jul 07 2024

’கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாகும் சிம்ரன்.. இருவருக்கும் ஒரே வயதா?

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’கருடன்’ படத்தில் நடித்த நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகை சிம்ரன் ஒப்புக்கொண்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது,

சூரி, சசிகுமார் உள்பட பலர் நடிப்பில் உருவான ’கருடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க நடிக்க நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவரும் கதை கேட்டவுடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க குடும்ப கதை அம்சம் கொண்டது என்றும் குறிப்பாக சிம்ரனின் கேரக்டர் படம் முழுவதும் வரும் வகையில் வெயிட்டானது என்பதால் அவர் சம்பளத்தை பற்றி கூட பேரம் பேசாமல் இந்த படத்தில் நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்பு கொண்டதாகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முழு நீள திரைப்படத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

சசிகுமாருக்கு 49 வயது என்ற நிலையில் சிம்ரனுக்கு 48 வயது ஆவதால் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement