விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பு சமந்தாவுக்கு போனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய்யே அவருக்கு வேறொரு பிரபல ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’எஸ்கே 24’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து நட்சத்திரங்களும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தது விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் என்றும் அவரும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தான் ராஷ்மிகா மந்தனா இந்த படத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
’தளபதி 69 ’ படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் அதிருப்தி அடைந்த ராஷ்மிகாவை தனது மேனேஜரிடம் விஜய் தான் பரிந்துரை செய்ததாகவும் இதனையடுத்து அவர் இந்த படத்தில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் இணைய இருப்பதால் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திற்கு ’டான்’ என்ற இரண்டு எழுத்து டைட்டிலை வைத்த நிலையில் இந்த படத்திற்கு ’பாஸ்’ என்ற இரண்டு எழுத்து டைட்டிலை சென்டிமென்ட் ஆக வைத்துள்ளதாகவும் இந்த டைட்டிலை அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் ரிஜிஸ்டர் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Listen News!