• Oct 06 2024

ஆரம்பித்துவிட்டது பாலாவின் ஆட்டம்.. ‘வணங்கான்’ படத்தின் சூப்பர் அப்டேட்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பாலா நடிப்பில், அருண் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பர பணியையும் தற்போது படக்குழுவினர் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் சற்று முன் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்ற திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் திடீரென பாலா மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து தற்போது கிராபிக்ஸ் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியிட பாலா திட்டமிட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர் நாளை மறுநாள் அதாவது ஜூலை 8ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் ரிலீசுக்கு பின்னர் இசை வெளியீட்டு விழா உட்பட சில விளம்பர பணிகளையும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் பாலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்பட பலர் நடிப்பில் உருவான ‘வணங்கான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், குருதேவ் ஒளிப்பதிவில், சத்ய சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement