சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகையாக அறிமுகமானார். இவருடைய அழகு, திறமை மற்றும் தனித்துவமான நடிப்பு என்பவற்றின் காரணமாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து பாணா காத்தாடி, தெறி, கத்தி, மெர்சல், 24 போன்ற பல படங்களில் நடித்தார். 2017 தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். ஆனாலும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
நடிகை சமந்தாவின் அழகு, திறமை மற்றும் ரசிகர்களிடம் பெற்ற அன்பு அவருக்கென்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட நோயால் சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக குஷி படம் வெளியானது.
சமீபத்தில் தான் இனி படங்களில் நடிப்பதை குறைத்து உடலுக்கு முக்கியத்துவம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் கதைகளின் தேர்வில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சமந்தாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல தோல்விகள் ஏற்பட்டன. ஆனால் அத்தனையையும் தாண்டி இன்றும் இரும்பு பெண்ணாக வலம் வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஆண் ஒருவரின் கையை பிடித்தது போல புகைப்படம் ஒன்றும் வெளியானது.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அது சமந்தாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட ரூத் பிரபு ராஜ் நிதிமோரின் கை எனவும், இதன் மூலம் சமந்தா தனது காதலை உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் கமென்ட்ஸ் பண்ணி வருகின்றனர்.
Listen News!