• Jan 19 2025

அசோக் செல்வன், நிமிஷா சஜயனின் புதிய வெப்தொடர்: அமேசான் அட்டகாசமான அறிவிப்பு

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலக பிரபல நடிகர் நடிகைகளே தற்போது வெப் தொடரிலும் நடித்து வருகின்றனர் என்பதும் திரைப்படங்களில் நடிப்பதற்கு இணையாக வெப் தொடரில் நடிப்பதால் புகழும் பணமும் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமன்னா, சமந்தா உள்ளிட்ட பெரிய நடிகைகளே தற்போது வெப் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரில்ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ’ சித்தா’, ’மிஷின் சாப்டர் ஒன்உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை நிமிஷா சஞ்சயன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.
அமேசான் பிரைம் வீடியோ இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த வெப் தொடருக்கு  ‘கேங்க்ஸ் குருதிப் புனல்என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வெப் தொடர் க்ரைம் கதையம்சம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் 70 களின் பின்னணியில் இரண்டு கேங்ஸ்களுக்கு இடையே நடைபெறும் மோதல் தான் இந்த வெப் தொடரின் கதை என்றும் இந்த வெப் தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நோவா என்பவர் இந்த வெப் தொடரை இயற்றியுள்ளார்.
 
கடத்தல்காரர்கள், வியாபாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பல முக்கிய கேரக்டர்கள் இந்த வெப் தொடரில் பங்கேற்று உள்ளதாகவும் அழுத்தமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.



Advertisement

Advertisement