• Jan 18 2025

சூது கவ்வும்'ல அசோக் வரும்போது ரொம்ப பெருமையா இருந்தது... நான் அப்படி சொன்னா கவலைபடுவிங்கனு சொன்னான்... அசோக் செல்வன் அம்மா மலர் செல்வம் நெகிழ்ச்சியாக அளித்த பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சூது கவ்வும் திரைப்படத்தில் தனது மகன் அசோக் செல்வன் நடித்தது குறித்து அவரின் அம்மா மலர் செல்வம் இவ்வாறு நெகிழ்ந்து பேசியிருந்தார். 


நடிகர் அசோக் செல்வன் தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தாலும் தற்போது நடிகர் முக்கியத்துவமான திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகை  கீர்த்தி பாண்டியனை மணந்தார்.


நடிகர் அசோக் செல்வன் குறித்து அவரின் அம்மா மலர் செல்வன் பேட்டி ஒன்றில் இவ்வாறு நெகிழ்ந்து பேசியுள்ளார்.  சூது கவ்வும் திரைப்படத்தில் நடித்து இருந்தான் என்னிடம்  ஒரு சின்ன கேரெக்டர் அம்மா இந்த படத்துல நான் நடிச்சது அப்டினு சொன்னான். நான் சரி ஓகேபா நீ நடிச்சி இருக்க தானே அது போதும் படம் பார்ப்போம்னு தியேட்டர் போனோம். 


முதல் ஷோ முதல் நாள் படத்துல பெஸ்ட்டே அவன் தான் நடிச்சான் எனக்கு சரியான சந்தோசம் அவளோ பெரிய திரையில பாத்தது. அவன் அந்த படம் நடிக்கிற வரைக்கும் ரொம்ப கஷ்ட்டப்பட்டான். இப்ப இடம் புடிச்சிட்டான் அப்புறம் ஒருமாதிரி மேல வந்துருவான்னு நம்பிக்கை இருந்துச்சி. அந்த படத்துல ஒரு சீன்னு  நிறைய இடத்துல நடிச்சி இருந்தான்.


நான் கேட்டன் சின்ன ரோல்லனு சொல்லிட்டு இத்தனை சீன்ல நடிச்சி இருக்கனு அதுக்கு இல்லமா ஒருவேளை டிலீட் பண்ணியிருந்தா நீங்க கஷ்ட்டபடுவீங்கன்னு தான் சின்ன ரோல்ன்னு சொன்னன்னு சொன்னான். நான் படம் பாத்துட்டு வெளிய வந்து பாத்தன் மக்கள் இவன பாக்குறாங்களா என்று யாரும் பெருசா கவனிக்க இல்ல அப்பா நினைச்சான் இன்னும் நடக்கணும் போலன்னு. ஆனா எனக்கு ரொம்ப சந்தோசம் என்று அசோக் செல்வன் அம்மா மலர் செல்வன் கூறியிருந்தார். 

Advertisement

Advertisement