• Jan 19 2025

தங்கை செண்டிமென்டில் தாக்க தயாராகும் வெங்கட் பிரபு... தளபதி 68ல் விஜய்க்கு தங்கை இவங்களா... புகைப்படம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் அந்த படத்தில் ஸ்னேகா, பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் பூஜையுடன் படம் தொடங்கிய நிலையில் தாய்லாந்தில் முதற்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. 


அதனை தொடர்ந்து துருக்கியில் அடுத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்யின் பல படங்கள் தங்கை செண்டிமெண்ட் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. லியோ படத்தில் கூட மடோனா செபாஸ்டியன் விஜய் தங்கையாக நடித்து இருந்தார்.


அதனை தொடர்ந்து தளபதி68 படத்தில் விஜய் தங்கையாக நடிக்க இளம் நடிகையை தேர்வு செய்திருக்கின்றனர். லவ் டுடே பட புகழ் நடிகை இவானா தான் விஜய்க்கு தங்கையாக படத்தில் நடிக்கிறாராம் அதன் அதிகார பூர்வமான தகவல் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என இணைய பக்கத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.  


Advertisement

Advertisement