சமீபகாலமாக திரையங்குகளில் வெளியாகும் திரைப்படங்களைப் போல ஓடிடி தளங்களிலும் பல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 80 ஆண்டுகள் பழமையான நிறுவனமாக இருப்பது ஏவிஎம் நிறுவனம். இந்த நிறுவனத்தை நான்காம் தலைமுறையினரான ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பனின் பேத்தி பொறுப்பேற்றுக் கொண்டு புதும் பொலிவுடன் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக சோனிலிவ் தளத்தில் "தமிழ் ராக்கர்ஸ்" என்ற வெப் தொடரை வெளியிட உள்ளது. இந்த இணையத் தொடரில் அருண் விஜய் முதன்மை பாத்திரத்திலும், நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருண்ட பக்கத்தை "தமிழ் ராக்கர்ஸ்" தொடர் எடுத்துக் காட்டவுள்ளது.
சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் முதன் முறையாக இணைய தொடரில் நடித்துள்ளார். ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்துள்ளார். அத்தோடு தமிழ் ராக்கர்ஸ் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பிற செய்திகள்
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் புதிய லுக் போஸ்டர் ரிலீஸ்- அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
- காளிதேவி கையில் சிகரெட்?? -தமிழ் ஆவணப்பட பெண் இயக்குநரை கைது செய்ய கோரிக்கை
- சென்னை வந்த ரம்பா குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!