• Jan 18 2025

ரோகிணியின் சீக்ரெட்டை புட்டுபுட்டு வைத்த சீதா! பேரதிர்ச்சியில் மீனா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை ஹாஸ்பிடலுக்கு வருமாறு சீதா போன் பண்ணி அழைக்கின்றார். ஏன் என்ன ஆச்சு எனக் கேட்க, எல்லாம் நல்ல விஷயம் தான் என மீனாவை அழைக்க மீனாவும் அங்கு செல்லுகின்றார்.

இதன் போது சீதா தமது ஹாஸ்பிடலில் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் பூ கொண்டு வந்து தருமாறு சொல்லுகின்றார். மேலும் இனிமேல் வீட்டுக்கு தர வேண்டிய காசை தர வேண்டாம் நீ கஷ்டப்பட்டது போதும் நானே இனி பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, மீனா கண் கலங்குகின்றார். இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டிருக்க, அங்கு ரோகிணி இருப்பதை பார்த்து விடுகிறார்.

இதன்போது சீதா என்ன என்று போய் விசாரிக்குமாறு சொல்ல, வேண்டாம் அவங்க என்ட விஷயத்துல தலையிட வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க போனமுறை பட்டதே போதும் என மீனா சொல்ல, அப்படி என்றால் நான் போய் ரிசப்ஷனில் கேட்கின்றேன் என்று சீதா செல்லுகின்றார். அங்கு விசாரிக்கவும் அவர் ரோகிணி இரண்டாவது பிரக்னன்சிக்கு ட்ரீட்மென்ட் செய்ய வருவதாக சொல்கின்றார்.


இதனால் இந்த விஷயத்தைக் கேட்டு மீனா மிகவும் அதிர்ச்சி அடைகின்றார். மேலும் இதனை நம்முடைய அம்மாவிடம் கூட சொல்ல வேண்டாம் என சொல்லுகின்றார். இதை நினைத்துக் கொண்டே வரும்போது வீதியில் ஆக்சிடென்ட் ஆகவும் பார்க்கின்றார்.

அதன் பின்பு வீட்டுக்கு வந்த மீனாவிடம் விஜயா, டீ போட சொல்ல அவர் டிவியை போடுகின்றார். மீனா அதே யோசனையில் இருக்க, ரோகிணி மனோஜ் வந்து விஜயாவுக்கு ஸ்வீட் கொடுக்கின்றார்கள். என்ன விஷயம்? எதுவும் விசேஷமான என கேட்கவும், ரோகிணி இல்லை மனோஜ் இன்றைக்கு 15 டிவி வித்திருக்கான். அதுல நல்ல ப்ராபிட் கிடைத்திருக்கு என்று சொல்லுகின்றார். இதனால் விஜயா ஏமாற்றம் அடைகிறார்.இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement