• Apr 28 2024

பாத்ரூமில் டவல் சண்டைக்காட்சி - இது அழகான காவியமாக இருந்தது.! 'டைகர் 3' நடிகை மிஷ்ஷேல் லீ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

 'டைகர் 3' படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து, அதில் இடம்பெற்ற  டவல் சண்டைக்காட்சி இணையதளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக  மாறியுள்ளது.

அதன்படி, சல்மான் கான் நடிப்பில்,ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 'டைகர் 3'  திரைப்படம் இந்தவருட தீபாவளிக்கு ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.


அத்துடன், இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஒத்திகை பார்த்ததாக மிஷ்ஷேல் லீ கூறியுள்ளார்.  

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 'நான் ஆச்சர்யப்படவில்லை. நாங்கள் இதை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் நாங்கள் இந்த சண்டைக்காட்சியை கற்று, பயிற்சியும் எடுத்துக்கொண்டு அதன் பின்னரே இதை படமாக்கினோம். இதற்காக வடிவமைக்கப்பட்ட அரங்கு உண்மையிலே அழகியலாக இருந்ததுடன் இந்த சண்டைகாட்சியில் நடிப்பதற்கு உண்மையிலேயே வேடிக்கையாகவும் இருந்தது' எனக் கூறியுள்ளார்.


மேலும், 'கத்ரீனாவால் அழகாகவும் தொழில்முறை நடிகையாகவும் இருக்க முடிந்தது. துல்லியமான நகர்வுகளும் வேகமாக இருப்பதையும் அவர் உறுதி செய்தார். நடனத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தோம்' என்றார். 

அத்துடன், அவர்களது உடல்களை சுற்றிலும் மறைத்தபடி இந்த குளியலறை காட்சியில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியது நிச்சயமாக ஒரு சவால் தான். சில நேரங்களில் டவல்களின் முக்கிய பகுதி கிழிந்துபோய் அதை தைத்து பயன்படுத்தியதும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது' என மேலும் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement