• Jun 17 2024

சென்னை வந்த ரம்பா குடும்பத்துடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் கடந்த 1992ம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ரம்பா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த உழவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து இருக்கின்றார். இவ்வாறு பிரபலமான இவர் விஜய் அஜித் அர்ஜுன் பார்த்தீபன் கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்குச் சென்று செட்டிலான இவர் மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதுமே மீனா வீட்டுக்கு வந்த ரம்பா கடைசி வரை அவருடனே இருந்தார்.

அண்மையில் குடும்பத்துடன் அருண் விஜய்யின் யானை திரைப்படம் பார்த்த ரம்பா சமீபத்தில் கடற்கரை சென்றுள்ளார். குடும்பத்துடன் அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement