• Jan 15 2025

ரொம்பவும் ஓவரா போறீங்க பாக்கியா.. எழிலுக்கு ஈஸ்வரி கொடுத்த எமோஷனல் டாச்சர்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் பாக்கியா எல்லோரிடமும் மாமாவுக்கு நாளைக்கு எண்பதாவது வயது. அதனால் எல்லோரும் அதனை கோயிலில் கொண்டாடலாம் என சொல்ல, அங்கிருந்த ராமமூர்த்தி இந்த சூழ்நிலையில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேணுமா எனக் கேட்கிறார்.


அதன் பின்பு அங்கே வந்த ஈஸ்வரியும்,  எழில் விஷயத்தில் நீ என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று பாக்கியாவிடம் கேட்கின்றார். அதற்கு அவர், அவன் வரணும் என்று நினைத்தால் வருவான் என்று சொல்ல, நீ கூப்பிடாம அவன் எப்படி வருவான் என்று ஈஸ்வரி கேட்கின்றார். ஆனாலும் அவன் வரணும் என்று நினைத்தால் வருவான் அது அவனுடைய முடிவு என பாக்கியா சொல்லுகின்றார்.

அதன் பின்பு ஈஸ்வரி எழிலுக்கு கால் பண்ணி நாளைக்கு தாத்தாவுக்கு பிறந்தநாள் கோயிலில் கொண்டாட போறோம் என்று சொல்ல, தனக்கும் வர ஆசைதான் என்று எழில் சொல்லுகின்றார். ஆனாலும் நான் வந்தால் உங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா என்று கேட்க, ஈஸ்வரி அழுது கொண்டே ஆமாம் ஒரு மாதிரி இருக்கும் நீ வராத.. வரவே வராத.. என போனை வைக்கின்றார் இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement