• May 18 2024

வாரிசு படத்தில் இத்தனை பாடல்களா?- செம சூப்பர் தகவலை வெளியிட்ட இசையமைப்பாளர் தமன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.இவர் தற்பொழுது தனது 66வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அப் டெவலப்பராக விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் பற்றி இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் “விஜய் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வாரிசு திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் ஒவ்வொன்றும் ஒரு எமோஷனில் இருக்கும்.” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement