• May 18 2024

மறைந்த நடிகர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று - நினைவு கூர்ந்து வரும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் மறைந்த இயக்குநர் மகேந்திரன். இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தை விடவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதவே அதிகம் விருப்பம் கொண்டிருந்தார்.அந்த வகையில் சிவாஜியின் 'தங்கப்பதக்கம்' படத்தில் இருந்து தொடங்கினார்.

மகேந்திரனின் எழுத்தை கண்டு வியந்த இயக்குநர்களும் முன்னணி நடிகர்களும் அவர் தங்களது படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பினர். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் எழுத்தாளராக வலம் வந்தார்.

பின்பு ரஜினியை வைத்து 'முள்ளும் மலரும்' படத்தை முதல் இயக்கினார்.இந்தப் படத்தில் ரஜினி நடித்த காளி என்னும் கதாப்பாத்திரம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கெட்டபய சார் இந்தக் காளி' என்ற வசனம் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்காது.. அது வெறும் வசனமல்ல, தன்மானமுள்ள கிராமத்து இளைஞனின் உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு. இன்றளவும் இந்தப் பாத்திரம் போல் தனக்கு பிடித்த பாத்திரம் வேறு எதுவும் இல்லை, இதுவரை நடித்தப் படங்களிலேயே தன்னை வியக்க வைத்தது தான் என, ரஜினி அடிக்கடி சிலாகிப்பதும் உண்டு.

அமைதியான மனிதனுக்குள் அவ்வப்போது தலைதூக்கும் கட்டுவிரியன் மனசை, அவர் திரையில் காட்டியிருந்த தன்மை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.மகேந்திரனின் படங்களும் அவரது பாத்திரங்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவரே தனது படைப்பின் முதல் ரசிகனாக இருந்து கை பக்குவத்துடன் சமைத்து திரையில் பரிமாறுகிறார்.

இதற்கு ஒரு உதாரணமாக, 'ஜானி' திரைப்படத்தில் ரஜினியிடம் ஸ்ரீதேவி காதலைச் சொல்லும் காட்சியில் தென்படும் ரசனையைக் கூறலாம். இயக்குநர் மகேந்திரனின் பேரைச் சொன்னால், இப்படி இன்னும் பல காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்குள் விரியும்.. தமிழ் சினிமா நன்றி கடன்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன், இன்று உயிரோடு இல்லையென்றாலும் அவரது படைப்புகள் ரசிகர்களிடம் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அதுவே இயக்குநர் மகேந்திரனின் வெற்றி!

இது தவிர நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement