• Apr 28 2024

லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்- தளபதியை நிம்மதியாக இருக்க விடமாட்டீங்களாப்பா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கண்டிப்பாக இந்தப் படத்தையும் வேற லெவலில் எடுப்பார் என்று நம்பப்படுகின்றது.

இத்தோடு இப்படத்தில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.படக்குழுவினர் காஷ்மீருக்கு பறந்து சென்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


வரும் அக்டோபர் 19ம் தேதி தான் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது. ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தான் லியோ ரிலீஸ் ஆக இருக்கிறது.பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதன் VFX பணிகள் தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


லியோ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் பொன்னியின் செல்வன் 2 படம் வரலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் லியோ வசூலுக்கு பெரிய சிக்கல் வரலாம்.ஏற்கனவே விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனால் விஜய் பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement