• Sep 20 2024

ஆக்ஷன் கிங் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பெயரால் அறியப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் 90S காலத்தில் முன்னணி நட்சத்திரமாக சினிமாவை கலக்கி வந்தவர்.இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் முதல்வன் கிரீடம் ஜென்டில்மேன் ஒற்றன் முதலான திரைப்படங்கள் முக்கியமானவையாகும். எந்த கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடியவர் நடிகர் அர்ஜுன்.அந்தவகையில் இவர் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் சினிமாவில் ரீ-என்றி கொடுத்தார்.

சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அர்ஜுன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் புதிய படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக்சென் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றும் அஜூனின் மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.

அர்ஜுன் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement