• Nov 05 2024

தட்டி கூப்பிடும் விக்னேஷ்! தலையசைக்கும் பிரதீப்! வைரலாகும் அனிருத் வீடியோ...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அடுத்த உருவாக்கி வருகிறது LIK  என்ற திரைப்படம். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி அவர்களும் நடிக்கிறார்கள். ஒரு காதல் ஜானர் திரைப்படமாக வரவிருக்கும் இதன் முதல் சிங்கிள் சோங் சமீபத்தில் வெளியானது. 


இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று தீமா பாடலின் ஒரு காட்சியைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்தார். காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற இந்த இசை ஜோடி, கடந்த காலங்களில் வெற்றிகரமான கூட்டணியின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் முதல் சிங்கிள் அனிருத்தின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் பார்வையை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் ஒரு விடியோவை ஷேர் செய்துள்ளார். 


அதில் அனிருத் தீமா பாடலை பாட பிரதீப் ரங்கநாதன் தலையசைத்து கேட்டு கொண்டிருப்பதை இயக்குனர் விக்னேஷ் சிவன் விடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் பிரதீப் போனை வாங்கி அவர்பக்கம் திருப்பி எடுக்கிறார். இருவரும் அனிருத் பாட தலையசைத்து ரியாக்சன் செய்வதுபோல விடியோவை ஷேர் செய்துள்ளார் பிரதீப். 



Advertisement

Advertisement