• Jan 15 2025

தாறுமாறாக வசூலில் வேட்டையாடும் அந்தகன்.. முதல் மூன்று நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

90 ஆம் ஆண்டு கால பகுதிகளில் தமிழ் சினிமாவில் மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்தான் நடிகர் பிரசாத். இவர் நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ஆகிய திரைப்படங்கள் இன்றளவில் மட்டும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களாக காணப்படுகின்றது.

தனது தனிப்பட்ட காரணங்களினால் சினிமா துறையில் இருந்து விலகி காணப்பட்ட பிரசாத் தற்போது அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தை அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கியிருந்தார்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உலக அளவில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாத்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். தற்போது வரையில் இந்த படத்தில் உள்ள குறைகளை விட பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றன.


அந்தகன் படம் வெளியாகி முதலாவது நாள் வசூல் மட்டும் 65 லட்சங்களை வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இரண்டாவது நாளில் ஒரு கோடியே 15 லட்சம் வசூலித்து இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்தகன் படம் வெளியாகி மூன்றாவது நாளை கடந்த நிலையில் அதன் வசூல் விவரம் வெளியாகி வைரலாகி உள்ளது.

அதன்படி அந்தகன் படம் மூன்று நாட்களில் மட்டும் 2.99 கோடிகளை வசூலித்து உள்ளதாம்.

Advertisement

Advertisement