• Nov 29 2022

கோடி கணக்கில் சொத்து இருக்கும் அமிதாப் பச்சனின் மகள் இந்த வேலையா செய்கின்றார்..வெளியானது தகவல்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

ஹிந்தி சினிமாவில்  தனக்கென ஒரு இடத்தை படித்து முன்னிலையில் இருக்கும் அமிதாப் பச்சனுக்கு சுமார் 3396 கோடி ருபாய் மதிப்புக்கு சொத்து இருக்கிறது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் என எல்லோரும் சினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.

அமிதாப்பின் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.மேலும்  அவரது மகள் நவ்யா நவேலி விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நுழைய உள்ளார்.

அமிதாப் மகள் ஸ்வேதா பச்சன் திருமணத்திற்கு பின்னர் ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் டீச்சராக வேலை செய்தாராம். அதற்கு 3000 ருபாய் மாத சம்பளம் கிடைத்தது என சமீபத்தில் கூறி உள்ளார் அவர்.அத்தோடு தற்போது அவர் சொந்தமாக ஒரு பேஷன் லேபிள் நடத்தி வருகிறாராம்.


தனக்கு சின்ன வயதில் இருந்தே பணம் பற்றிய விஷயங்கள் அதிகம் தெரியாது, அதனால் தற்போது நடத்திவரும் நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்கள் கூட தான்  கவனிப்பதில்லை. இந்த நிலை என் மகள் நவ்யா நவேலிக்கு வர கூடாதென அனைத்தையும் தற்போது அவளையே பார்க்க வைக்கிறேன்.


மேலும் வீட்டின் தினசரி செலவுகளை கூட நவ்யா தான் நிர்வகிக்கிறார் என ஸ்வேதா பச்சன் கூறியிருக்கிறார்.