• Apr 19 2024

ராஷ்மிகாவை கோவை சரளாவின் தோற்றத்திற்கு ஒப்பிட்டுக் கூறும் நெட்டிசன்கள்... என்ன கொடுமைடா இது..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நாயகனான விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இதுவரை 65 படங்களைக் கடந்து விட்ட நிலையில் 66 ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் 'வாரிசு'. தில் ராஜு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் 'ரஞ்சிதமே' பாடல் நேற்று மாலை வெளிவந்தது. 


இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி ஆகியோர் இணைந்து சூப்பராகப் பாடியுள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வெளியான நேரம் முதல் சமூக வலைதளத்தில் எதிர்க்கணிய கருத்துக்களை முன்வைத்து நெட்டிசன்கள் மத்தியில் சற்று ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.

அந்தவகையில் ரஞ்சிதமே பாடல் காப்பி என்று கூறி சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வந்தவர்கள் தற்போது ராஷ்மிகாவையும் ட்ரோல் செய்ய துவங்கியுள்ளார்கள். அதாவது ரஞ்சிதமே பாடலில் ராஷ்மிகாவை பார்ப்பதற்கு, கரகாட்டம் படத்தில் வரும் கோவை சரளா போல் இருக்கிறார் என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த ட்ரோல் புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement