• Jan 19 2025

த.வெ.க மாநாட்டில் அஜித் உரையா? பின்னணியில் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் எதிர்வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதோடு மருத்துவர் அணி, தொழில் நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாக பிரித்து வேலைகள் நடைபெற்று கொண்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநாட்டில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்து வருகின்றார் விஜய். இது தொடர்பில் பிரபல பத்திரிகையாளர்  வலைப்பேச்சு அந்தணன் பேட்டி கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பரபரப்பாக நடக்கிறது. இன்னொரு பக்கம் வானிலை ஆய்வு மையம் இந்த இடத்தில் மழை, புயல் என பீதியை கிளப்பினாலும் அதை காதில் வாங்காமல் மாநாட்டு வேலை சுறுசுறுப்பாக நடக்கிறது.

இதற்கு முன் விக்கிரவாண்டியில் திமுக ஒரு மாநாடு நடந்தது . அதற்கு வந்தது எல்லாம் ஒரு கூட்டமா என்று கேட்கும் வகையில் இந்த மாநாட்டில் கூட்டம் கூட உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து விக்கிரவாண்டிக்கு ஒருவர் நடந்தே வந்து கொண்டுள்ளார். இதை யாராலும் செய்ய முடியாத காரியம். அதற்கு காரணம் விஜய் உச்ச நடிகர் என்பதும் அவர் மக்களுக்காக சினிமாவை விட்டு வருகின்றார் என்பதும் தான்.


மேலும் இந்த மாநாட்டில் எந்த குறையும் வந்துவிடக்கூடாது என்று உச்சப் பாதுகாப்பு போடப்பட்டு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ், சாப்பாடு என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்கள். இந்த மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் அவை அனைத்தும் விஜயின் சொந்த பணம் என்பதும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாநாட்டில் பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. அது மட்டுமின்றி அனைவரது நட்பையும் பெறவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் விஜய், அஜித்திடம் இருந்து ஒரு வாழ்த்து கடிதத்தை வாங்கி அதை மாநாட்டு மேடையில் படிக்கலாம் என்ற ஒரு தகவலும் கூறப்பட்டுள்ளது. அது உண்மையாக இருக்கும் என்றால் இது மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறும்.

அதற்கு காரணம் அஜித்திற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளார்கள். பல காலமாகவே அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றார்கள். அதனை நிறுத்த வேண்டும் என்று விஜய் நினைப்பதால் அஜித்திடமிருந்து ஒரு வார்த்தை வாங்க இருப்பதாக கூறப்படுகின்றது.


















Advertisement

Advertisement