• Sep 20 2024

அஜித்தின் போட்டோஸ் இனிமேல் வெளியாகாது- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஏகே 61 படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் குமார் -போனி கபூர் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் தான் ஏகே61.பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இதில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு வேடங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு மற்றும் பேங்க் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்தக்கட்ட சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ள நிலையில் இடையில் சிறிது கேப் எடுத்துக்கொண்டு ஐரோப்பாவில் அஜித் சுற்றுலா மேற்கொண்டார்.தினந்தோறும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பைக் ரேஸ் புகைப்படங்கள், கார், பைக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்று அடுத்தடுத்து வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பூனாவில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் கலந்துக் கொள்ள உள்ளாராம். இந்த சூட்டிங்கில் அஜித்தின் அடுத்த கெட்டப்புடன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.இதையடுத்து அவரது இந்த கெட்டப்பின் சீக்ரெட்டை மெயின்டெயின் செய்யவே புனேவில் சூட்டிங் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது கெட்டப்பை மிகவும் சீக்ரெட்டாக வைக்க திட்டமிட்டுள்ளதால், அவரது புகைப்படங்கள் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகாது என்றும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement