• Apr 30 2024

2வது முறையாக பைக்கில் சுற்றுலா செல்லவுள்ள அஜித்- அதன் பெயர் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் வசூலிலும் விமர்சனங்களிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து லைகா நிறுவத்தின் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்.

அஜித் நடிப்பைத் தொடர்ந்து சுற்றுப் பயணங்களை மேற் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.


தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


 அந்த பதிவில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு , அஜித் குமார் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றுலாப் பயணம் இந்த ஆண்டு ஆரம்பபிக்கப்படும் என்றும் நம்பப்படுகின்றது.



Advertisement

Advertisement

Advertisement