• Feb 04 2023

மிரட்டலான கேங்ஸ்டர் லுக்கில் நிற்கும் அஜித்- துணிவு படத்தின் மூன்றாவது பாடல் குறித்து வெளியாகிய அப்டேட்

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.இப்படமானது அடுத்த ஆண்டு பெங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது 

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். இப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா என்ற பெயரில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் & பாடகர் சபீர் பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த கேங்ஸ்டா பாடல் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் லிரிக்கல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


மேற்கொண்டு ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு நிற உடையில் மிரட்டலான கேங்ஸ்டர் லுக்கில் அஜித் தோன்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement