• Jan 27 2023

லவ்டுடே படத்திற்கு வைத்த முதல் தலைப்பு இது தானா?- நடிகர் சத்தியராஜ் கொடுத்த ஓபன் பேட்டி

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

இயக்குநர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் லவ்டுடே. இப்படத்தினை பிரதீப் தானே இயக்கி நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்திருந்தார்.

இவர்களைத் தவிர ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர்.

 இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகர் சத்யராஜ் அளித்துள்ளார். அதில், பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு,  "பிரதீப் ரங்கநாதன் மீது இயக்குநராக நம்பிக்கை இருந்தது. கோமாளி படம் பார்த்தேன் பிடித்திருந்தது. லவ் டுடே படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னார். ஏற்கனவே அவர் எடுத்த குறும் படத்தை காட்டினார். அப்பா லாக் என்று டைட்டிலை சொன்னதும் குஷி ஆகிட்டேன். பின்னர் தலைப்பு லவ் டுடே என்றானது. பிரதீப் கதை சொல்லும் போது நம்பிக்கையாக இருந்தது. முதல் நாள் நடிக்கும் போது பிரமாதமாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று தெரிந்தது" என சத்யராஜ் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.





Advertisement

Advertisement

Advertisement