• May 20 2024

பாண்டியன்ஸ்டோர்ஸை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலையும் கலாய்த்த கேபிவை சம்பியன் போட்டியாளர்கள்- அடுத்தது என்ன சீரியல் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரிசிகளின் இன்ஸ்பிரேஷன் சீரியலாகவே இருந்து வருகின்றது.

இதிலும் பாக்கியா கோபி விட்டிட்டு போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காமல் தன்னுடைய கெரியரில் முன்னேறி வருகின்றார்.பாக்கியாவின் இந்த முன்னேற்றம் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. 


இப்படியான நிலையில் அண்மையில் விஜய் டிவியில் கேபிவை சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பித்த நாளிலிருந்து காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது அதிலும் ஸ்ருதிகா செய்யும் காமெடி எல்லாம் வேற ரகம் எனலாம்.


மேலும் போன வாரம் பாண்டியன்ஸ்டோரஸ் சீரியலில் மூன்று மருமகள்களும் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை கேலி செய்து நடித்தார்கள். இந்த நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை டிவோர்ஸ் பண்ணியபோது நடந்த சீனை இமிடேட் செய்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்து பாரதி கண்ணம்மாவா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement