சமீபகாலமாகவே இலங்கையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்திய டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இல் கலந்து கொண்டு லாஸ்லியா சிறப்பித்திருந்தார்.
அதனையடுத்து இறுதியாக இடம்பெற்ற பிக்பாஸ் சீசன் 6இல் ஜனனி, ஏடிகே ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகினர். இந்த வரிசையில் தற்போது யாழ்ப்பாணத்து குட்டிப்பொண்ணு ஒருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
அதாவது யாழ்மண்ணில் இதுவரை காலமும் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து தனது இசையால் அனைவரையும் ஈர்த்த ஈழத்துப்பாடகி உதயசீலன் கில்மிசா இம்முறை ( 2023 ) நடக்கும் ஜீ தமிழின் சரிகமப ஜூனியர் இசை தேர்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
மற்றுமொரு யாழ் இளம் பாடகி இந்திய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பான விடயம் என மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது தனது திறமைகள் வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கில்மிசாவும் தெரிவித்து இருக்கின்றார்.
Listen News!