• Nov 06 2024

மருமகன் படத்தை முடித்த கையோடு மாமனார் படத்தில் நாகார்ஜூனா.. வேற லெவலில் லோகேஷ்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தனுஷ் நடித்து வரும்’ குபேரா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் தற்போது அவர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது மல்டி ஸ்டார் படங்களாக தான் உருவாகி வருகிறது என்பதும் ’விக்ரம்’ மற்றும் ’ஜெயிலர்’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்னர் மல்டி ஸ்டார் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தில் ஏற்கனவே சில பிரபல நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நாகார்ஜுனா இணைந்து உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



மருமகன் தனுஷ் நடித்த வரும் ’குபேரா’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நாகார்ஜுனா, அடுத்ததாக  மாமனார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திலும் இணைந்துள்ளதால் ஒரே நேரத்தில் அவர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவரது படங்களிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனா மட்டுமின்றி இன்னும் சில தெலுங்கு மற்றும் கன்னட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர் ஒருவரும் இணைய இருப்பதாகவும் கூறப்படுவதால் இந்த படமும் மல்டி ஸ்டார் படமாக மட்டுமின்றி பான் இந்திய படமாகவும் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், ரஜினிகாந்த், சத்யராஜ்,  ஸ்ருதிஹாசன் உள்பட பல பல நடித்து வருகின்றனர் என்பதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement