• Aug 12 2026

பாக்கியாவின் பிள்ளைகளுக்கு ராதிகா வைத்த செக்.. இனியா செய்த காரியம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பப்புக்கு வந்த போலீசார் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, அங்கிருந்த இனியா தான் எந்த தப்பும் செய்யவில்லை என கெஞ்சுகிறார்.

அதே நேரத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இருந்து ராதிகாவும், ராதிகாவின் இரண்டும் நண்பியும் வெளியே  வரும் போது,  அதில்  இனியா இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். அதன் பின்பு அங்கு போய் நடந்தவற்றை  விசாரித்து இனியாவுக்கு பேசியதோடு, அவரை விடுமாறும் போலிசாரிடம் கேட்கின்றார்.

ஆனாலும் அவர்கள் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போவதற்காக அனைவரையும் ஜீப்பில் ஏற்றுகின்றார்கள். ராதிகா உடனே  தனது அண்ணாவுக்கு விஷயத்தை சொல்லி போலீஸ் எசிக்கு கால் பண்ணி, அங்கிருந்த போலீசுக்கு அவர்களை விடுமாறு சொல்ல வைக்கிறார்.


இதனால் இனியாவை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முன்பு அவர் தடுத்து விடுகின்றார். அதன் பின்பு எல்லோரும் ராதிகாவுக்கு நன்றி சொல்ல, இனியாவும் நன்றி சொல்லுகின்றார். இதன்போது செழியன் கால் பண்ண அவரை அந்த இடத்திற்கு வருமாறு அழைக்கிறார்.

செழியனும் அங்கு வந்தவுடன் இனியாவ என்ன பண்ணுனீங்க? என ராதிகாவிடம் கேட்கின்றார். அதற்கு நான் உன் தங்கச்சியை காப்பாற்றி தான் விட்டேன் என்று நடந்தவற்றை சொல்லுகிறார். இதனால் கோவப்பட்ட செழியன் இனியாவுக்கு பேசிவிட்டு அவரை அழைத்துச் செல்ல, ராதிகா இனியாவின் கையை பிடித்து அவ்வளவு ஈஸியா விட முடியாது உங்க அம்மாவை இங்க வர சொல்லு என செக் வைக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement