• Jan 15 2025

இணையத்தில் வைரலாகும் அதிதி சங்கரின் டான்ஸ் வீடியோ! இதுதான் செம டிரெண்டிங்..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக காணப்படும் சங்கரின் மகளான அதிதி சங்கர் பின்னணி பாடகியாக இருந்து தற்போது நடிகையாக அறிமுகமாகி கலக்கிக் கொண்டுள்ளார்.

தனது அப்பாவின் அறிமுகத்தாலையே தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தற்போது காணப்படுகின்றன.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்து அதிதி சங்கர் அதன் பின்பு தனக்கு பிடித்த நடிப்பு துறையில் இருந்த ஆர்வத்தை தனது தந்தையிடம் கூறி நிறைவேற்றிக் கொண்டார்.

நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் ஆடிய மதுரை வீரன் பாடல் பேமஸ் ஆக காணப்பட்டது.

ஏற்கனவே தெலுங்கில் கானி படத்தின் மூலம் ரோமியோ ஜூலியட் பாடலுக்காக அதிதி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு விருமன் திரைப்படத்தில் இவரது துருதுருவான நடிப்பு பலரையும் கவர்ந்தது.


அதன் பின்பு மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதில் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு என்னும் பாடலை அதிதி சங்கர் பாடியிருந்தார்.

இவ்வாறு நடிப்பு மற்றும் பின்னணி பாடகியாக சிறந்து விளங்கிவரும் அதிதி சங்கர் தற்போது விஷ்ணுவரதன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக உள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஆடிய நடனம் ஒன்று படு வைரலாகி உள்ளது.

ஏற்கனவே அவர் இந்தியன்2 படத்தின் ஆடியோ லான்ஜில் நடனமாடி பாட்டு பாடி இருந்தது பல  விமர்சனங்களுக்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement