• Sep 20 2024

தளபதி விஜய்க்கு வெயிட்டான வில்லி ஆகும் நடிகை சமந்தா- சூப்பர் திட்டம் போட்டிருக்கும் லோகேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு.இப்படத்தை தெலுங்கு இயக்குநராக வம்சி இயக்கி வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா அந்தனா நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இவரைத் தவிர பட்டாசு பட ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சடா என டோட்டலாக புதிய காம்போ இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகுது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு வெயிட்டான ஃபீமேல் கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜும் திட்டமிட்டு வருவதாக சில பேட்டிகளில் சொன்ன நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்களே எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டுள்ளனர்.

பாலிவுட் ஹீரோயின் கியாரி அத்வானியை விஜய்க்கு ஜோடியாக்க மாஸ்டர் படத்தில் இருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அடுத்தடுத்து இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படங்களில் கமிட் ஆகி உள்ள கியாரா அத்வானி இப்போதைக்கு ஃப்ரீயாக இல்லை என்பதால், வேறு ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement