தெலுங்கு திரையுலகை சேர்ந்த எல்லோரும் லூசுகள் என்றும் ஆணாதிக்கம் மிகுந்தவர்கள் என்றும் அதனால் தான் நான் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றும் ‘கபாலி’ படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகின் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் தற்போது கூட அவர் இந்தி திரை உலகில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சமூக வலைதளத்தில் துணிச்சலான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருவார் என்பதும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் கொதித்து எழுவார் என்பது பலர் அறிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெலுங்கு திரை உலகம் குறித்த கேள்விக்கு ’தெலுங்கு திரை உலகம் மிகவும் மோசமானது என்றும் ஆணாதிக்கம் மிகுந்தது என்றும் தெரிவித்தார். பெண்களை தெலுங்கு திரையுலகினர் நடத்தும் விதம் சிறிதும் பொறுத்து கொள்ள முடியாதது என்றும் பெண்களுக்கு வழங்கும் கேரக்டர் கூட பைத்தியக்காரத்தனமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அங்கு ஹீரோக்கள் நடந்து கொள்ளும் விதம் எனக்கு சுத்தமாக பிடிக்காது, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென மூடு சரியில்லை என்று ஹீரோக்கள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்றுவிடுவார்கள், ஆனால் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட யாரும் அவர்களை ஒன்றுமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
தெலுங்கு திரை உலககினர் நடிகைகளை மதிப்பதே இல்லை, நடிகர்களுக்கு முக்கியத்துவத்தில் ஒரு சில சதவீதம் கூட நடிகைகளுக்கு கொடுக்க மாட்டார்கள், அதனால் தான் என்னால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க முடியவில்லை, ஒரு சில படங்களில் நடித்துவிட்டு நான் மிகவும் கஷ்டப்பட்டேன், இனி மேலும் தெலுங்கில் நடிக்க மாட்டேன் என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
Listen News!