• Sep 21 2024

மீண்டும் தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் நடிகை பூஜா ஹெக்டே- பேச்சு வார்த்தை நடத்தி வரும் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜுவா நடிப்பில் வெளியான “முகமூடி“ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் படவாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் தெலுங்கில் அவருக்கு படவாய்ப்புக்கள் கிடைத்ததால் அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். அந்த வகையில் தமிழில் மீண்டும் பீஸ்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் தளபதி விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தளபதியுடன் மீண்டும் பூஜா ஹெக்டே இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க பூஜாஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement