ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். மேலும் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். மேலும் ஹன்சிகாவின் தாய்மொழி ஹிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்.
பின் ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின் கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.
மேலும் இவர் பல ஹிட் படங்கள் குடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரமாண்டமாக தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
Listen News!