• Apr 26 2024

நீல நிற சேலையில் நீங்கா இடம்பிடித்த நடிகை அனுபமா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள மொழியில் வெளியாகி இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்றிருந்த 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

எனினும் தமிழ் சினிமாவில் அரசியலை மையமாக கொண்டு தனுஷ் நடித்திருந்த 'கொடி' என்ற திரைப்படத்தின் மூலம் அப்படத்தில் இடம்பெற்ற இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமாகியிருந்தார்.

இவர் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார். எனினும் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுபமா திரையுலகில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் அதிகளவு ஈடுபாடு கொண்டவர். இவர் அடிக்கடி பல வர்ண உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது வழக்கம்.

இதே போன்றே தற்போதும் நீல நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோ ஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி அவர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வருகின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement