• Sep 20 2024

விஜய்யைப் போல சைக்கிளில் வந்த நடிகர் விஷால்- ஒரு வேளை லத்தி பட புரமோஷனாக இருக்குமோ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால். 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சண்டகோழி, திமிரு போன்ற திரைப்படங்கள் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தன.

அந்த வகையில் இவர் தற்பொழுது புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சுனைனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.மேலும், விஷால் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிளாக நடித்து அனைவரின் கவனம் ஈர்த்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுற்றி நிற்க, ரத்தவழிந்த முகத்தோடு தப்பி பண்ணிட்டு ஓடி ஒளியிற பொறுக்கி உனக்கே இவ்வளவு திமிரு இருக்கும் போது, அந்த தப்பை தட்டிகேட்கும் போலீஸ்காரன் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று விஷால் கேட்டு வருகின்றார்.

இந்நிலையில், விஷால் தற்பொழுது சைக்கிளில் சென்றிருக்கின்றார்.இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்தது போல, விஷாலும் ஏதோ புதுசா டிரைப்பண்ணி இருக்கிறார் என்றும், விஜய்யை பார்த்து காப்பி அடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் இரண்டு வீடியோவையும் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement