• Jun 02 2024

தனுஷை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து அண்ணா என்று கூறிய நடிகை- குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் வாத்தி நானெ வருவேன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் Avik San என்ற கொலைகாரன் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். சில நிமிடங்களை வந்தாலும் தனுஷின் நடிப்பை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தி கிரே மேன் படம் ரிலீசானதை கொண்டாடும் விதமாக பிரபலங்கள் பலருக்கு படக்குழு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொண்டாடினர். இந்த விருந்தில் மீடியாக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது சாரா அலிகான், தனுஷ் உடன் நெருக்கம் காட்டியது தான்.

அத்ரங்கி ரே படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போதே இந்த ஜோடிக்கு பாலிவுட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த சமயத்தில் விருந்து நிகழ்ச்சியில், தனுஷை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார் சாரா. பிறகு தனுஷூடன் கைகோர்த்து சுற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் செம வைரலாகின. இந்த நேரத்தில் தனுஷை தனது அண்ணன் என சாரா சொல்லி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தரங்கி ரே படம், தற்போது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ் உடன் மிக நெருக்கமாக இருந்து வந்த சாரா, திடீரென தனுஷை அண்ணா என சொல்வதற்கு என்ன காரணம் என புரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement