• Jul 12 2025

என் ஆதரவு கமலுக்கு.! கன்னடம் குறித்த சர்ச்சைக்கு நடிகர் சிவராஜ்குமாரின் துணிச்சலான பதிலடி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பழமையான மொழிகளில் தமிழ் மற்றும் கன்னடம் முன்னிலையில் உள்ளது. இவ்விரு மொழிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளதென்றாலும், பண்டைய தமிழ் இலக்கியத்தில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது மொழியியல் வரலாற்றில் பரவலாக ஏற்கப்படும் ஒரு கோட்பாடு. இதை அக்கால நூல்களும், கல்வெட்டுகளும் ஆதரிக்கின்றன. இந்நிலையில், தமிழ் சினிமாவின் நடிகரும், ஒரு சிறந்த அறிஞருமான கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று கூறியதற்குப் பெரும் வரவேற்பு மற்றும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.


தக் லைஃப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் குறித்து பேசுகையில், “கன்னடம் என்பது தமிழில் இருந்து வந்த ஒரு மொழி. அது தான் உண்மை." எனக் கூறியிருந்தார்.


இந்த நிலையில், கன்னட சினிமாவின் பிரபல நடிகர் சிவராஜ்குமார், கமல்ஹாசனின் இந்தப் பதிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கன்னட மொழி குறித்து பேசுபவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளார்கள் என்று கேட்டதன் ஊடாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார். அவரது வார்த்தைகள் தற்போது தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகாவிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிவராஜ்குமார் அளித்த இந்த துணிச்சலான பதிலுக்கு, தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கன்னட நெட்டிசன்களும் பெருமிதம் அடைந்துள்ளனர். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement