தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் ஒரு பேட்டியில் உணர்ச்சிகரமாக கதைத்ததுடன் தனது நடிகர் பயணத்தின் பின்னணி குறித்து பேசியுள்ளார். அதில் அவர் "நான் நடிக்க வந்ததற்கான காரணமே இதுதான்" என்று உண்மையை பகிர்ந்து கொண்ட அவரின் வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.
ஒரு உண்மையான வாழ்க்கை அனுபவம் எப்படி ஒரு சாதாரண மனிதனை சினிமா நட்சத்திரமாக மாற்றியது என்பதை பற்றி பிரதீப் ரங்கநாதன் தனது பேட்டியில் சிறப்பாக கூறியுள்ளார். அதில் அவர் "நான் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரங்களை சந்தித்திருந்தேன். பல நேரங்களில் தோல்விகளை சந்தித்தேன். ஆனால், ஒரு விஷயம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது!" என்றார்.
மேலும் பிரதீப் ரங்கநாதன், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடிப்பில் ஆர்வம் இல்லாதவர். ஆனால், ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட தருணம் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றார். அத்துடன் "என்னுடைய வாழ்க்கையில் நடிப்பு எனக்கு முக்கியமானது அல்ல, ஆனால் ஒரு நாள் என் நண்பர்கள் யாரும் வரவில்லை எனவே நான் மேடையில் நின்றேன். அப்போது, அந்த மேடை என் வாழ்க்கையை மாற்றியது!" என தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
Listen News!