• Apr 26 2024

தலைவர் 169 படத்தின் தலைப்பு ரிலீஸ்- அட வித்தியாசமான பெயராக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து பீஸ்ட் பட இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் தனது 169 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி தலைவர் 169 படத்தின் தலைப்பு ஜெயிலர் என்று வைக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement