சென்னை முகத்தூரில் வசிக்கும் பிக்போஸ் பிரபலம் மற்றும் நடிகர் தர்ஷன் கார் பார்கிங் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நீதிபதி கயல்விழியின் அதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியார் மகேஸ்வரி ஆகியோரிடம் ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறிய பார்கிங் பிரச்சனை வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அம்பத்தூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவரது வீட்டு வாசலில் வியாழக்கிழமை அன்று மாலை ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை காரை யாரும் எடுக்கவில்லை காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு அருகே உள்ள கடைக்கு ரீ குடிக்க சென்றுள்ளனர். இதனை பார்த்த தர்ஷன் மற்றும் அவரது நண்பன் லோகேஷ் இருவரும் சென்று அவர்களிடம் கார் பார்கிங் குறித்து கேட்டுள்ளனர். வாய் தகராறு சண்டையாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையில் அறிவித்ததை தொடர்ந்து ஜே ஜே நகர் காவல் துறை இருவரையும் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் சிறையில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இவரது பெயரில் நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றிய வழக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!