• Apr 06 2025

கஜினி பட வாய்ப்பு முதலில் மாதவனுக்கு கிடைத்ததா..?வெளியான அதிர்ச்சித் தகவல்!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களில் ஒன்றாக 'கஜினி' காணப்படுகின்றது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், 2005ம் ஆண்டு வெளியான இப்படம், நடிகர் சூர்யாவின் வாழ்க்கையில்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

காதல் கலந்த இந்த அதிரடியான திரில்லர் படம், தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது, இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், பிரபல நடிகர் மாதவன் வெளியிட்ட தகவல் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாதவன் கூறியதாவது, "கஜினி படத்தின் வாய்ப்பு முதலில் என்னிடம் வந்தது. முருகதாஸ் வந்து கதையை சொன்னார். ஆரம்பத்தில் கதை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை செல்லும் திசை எனக்குப் பிடிக்கவில்லை." என்றார்.

இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சூர்யாவிற்கு கிடைத்த அந்த வாய்ப்பு, ஆரம்பத்தில் மாதவனுக்கே கிடைத்தது.எனினும் தான் அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக கூறினார்.மாதவனின் இந்த முடிவு, அவரது சினிமா வாழ்க்கையில் தவறானது என்று சொல்ல முடியாது, ஏனெனில் அதன்பிறகு அவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மாதவன் மேலும் "நான் 'கஜினி' வாய்ப்பை விட்டு விட்டாலும், சூர்யா அதைச் சிறப்பாகப் பயன்படுத்தினார். அவர் அந்தக் கதாப்பாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார்" என்றார்.



Advertisement

Advertisement