இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களில் வென்றுள்ளது.
ஆட்சி அமைக்க 273 தொகுதிகள் வேண்டும் என்பதால் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்று உள்ளது என்பதும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான அனுமோகன் என்பவர் தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் அதிமுக குறைந்தபட்சம் 17 தொகுதிகளில் வெல்லும் என்றும், மீடியமாக வென்றால் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும், அதிகபட்சம் 31 தொகுதிகளில் வெல்லும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.
17 ஏன் சொன்னேன் என்றாலும் அது எம்ஜிஆர் பிறந்த நாள் என்றும், 24 ஏன் சொல்கிறேன் என்றால் ஜெயலலிதா பிறந்த நாள் என்றும் மூன்றாவது ஆக 31 ஏன் சொல்கிறேன் என்றால் சுக்கிரன் அதிமுகவுக்கு டாப் லெவலில் இருக்கிறது எனவே அவ்வாறு சொன்னேன் என்றும் ஜோதிடப்படி கண்டிப்பாக அதிமுக வெல்லும் என்றும் இதில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது முடிவுகள் வந்துள்ள நிலையில் அவர் கூறியபடி 17 தொகுதிகள் அல்லது 31 தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தொகுதியை கூட அதிமுக பிடிக்கவில்லை. இதிலிருந்து அவர் அவரது ஜோசியம் பலிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Listen News!