• Jul 27 2024

ஆர்யா வில்லன்.. அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவா? பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் தகவல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ என்ற திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் இயக்கும் இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் தனது முதல் பட நாயகனான அட்டகத்தி தினேஷ் நாயகன் ஆக இருப்பதாகவும் பிரபல நடிகர் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’சார்பாட்டா பரம்பரை’ என்ற படத்தில் ஆர்யா நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஆர்யா, பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதே போல் ’அட்டகத்தி’ ’கபாலி’ உட்பட ஒரு சில படங்களில் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்த தினேஷ் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை அவர் 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த படத்திற்கு ’வேட்டை’ என்ற டைட்டில் வைக்கப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஆர்யா, மாதவன் நடித்த படத்திற்கு இதே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் ஆர்யாவுக்கு ஹீரோவை விட முக்கியத்துவம் கொண்ட வேடம் என்பதால் தான் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் மீண்டும் ஆர்யாவுடன் ’சார்பட்டா பரம்பரை 2’ படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement