• May 09 2024

வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- ஷுட்டிங் நிலவரம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் சில காலம் பிரபல இயக்குநருடன் ஏற்பட்ட மோதலால் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை சுராஜ் இயக்குவதோடு லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என லைகா வெளியிட்டது.

அத்தோடு இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாம். இன்னும் 4 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் ஷூட்டிங் மீதம் இருப்பதாகவும், அதுவும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement