• May 22 2024

ஏகே 61 படப்பிடிப்பை நிறுத்தி விட்டு திடீரென பைக் டூர் அடிக்க கிளம்பி விட்ட நடிகர் அஜித்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் தற்பொழுது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது படப்பிடிப்பிற்கு சின்ன பிரேக் விட்டுவிட்டு பைக் டூர் அடிக்க கிளம்பி விட்டார்.

இந்நிலையில், யுகே மற்றும் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவிலான பைக் டூர் செல்ல நடிகர் அஜித் கிளம்பி விட்டார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட சொல்லி உத்தரவிட்ட நிலையில், இணையத்தில் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

காஸ்ட்லி பைக்குடன் நடிகர் அஜித் செம மாஸாக போஸ் கொடுத்து நிற்கும் பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவர் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விட்டு பைக் டூர் சென்ற காரணம் மட்டும் இன்னும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement