• May 01 2024

இறுதிச்சுற்று திரைப்பட நடிகையின் வித்தியாசமான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் முதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .

அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் "ஆண்டவன் கட்டளை" ராகவா லாரன்ஸு டன் "சிவலிங்கா" போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் ரித்திகா, அப்படி அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படங்களில் ஒன்று தான் "ஓ மை கடவுளே." இந்த படம் நல்ல விமர்சனத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்று கொடுத்தது.

இந்தப் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இவருடைய மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது. இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில்,அதிக முனைப்பு காட்டி வருகிறார். அந்தவகையில் அவர் 3 படத்தை கைவசம் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா போட்டோ ஷூட் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்.விதமாக போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போது ஜீன்ஸும்,வெள்ளை ரி-சேட்டும் அணிந்த போட்டோவை இணையத்தில் தெறிக்க விட்டுள்ளார். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் அதிக ட்ரெண்டாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement