• Sep 21 2024

நடிப்பு பாதி நேரம் ,ஹொட்டல் பிஸ்னஸ் மீதி நேரம்- நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகர் ஜீவா.இதனைத் தொடர்ந்து கடந்த 2003 ம் ஆண்டு வெளியான ஆசை என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்பதும் யாவருக்கும் தெரிந்ததே.

இப்படத்தில் கிடைத்ததை் தொடர்ந்து தித்திக்குதே,ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தாலும் இவருக்கு செம ரீச் கொடுத்தது சிவா மனசுல சக்தி திரைப்படம் தான். காதல் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருந்தார்.


ஆனால் சமீபகாலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


அண்மையில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது. ஜீவாவின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.மேலும் இவர் சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement