• Jun 29 2024

நந்தினியை அறைந்த விசாலாட்சி... வெண்பாவைப் பார்த்துக் கடுப்பான கதிர்... பதிலுக்கு திட்டிய ஈஸ்வரி.. கலவரமான குணசேகரன் வீடு.. சூடுபிடிக்கும் 'Ethirneechal' Episode..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அதில் முதியோர் இல்லத்திற்கு கொடுப்பதற்காக நந்தினி சமைத்து வைத்திருந்த உணவு பாத்திரங்களை பார்த்த கதிர் "என்ன இதெல்லாம்" என கேட்டு உடனே திறந்து பார்க்கிறார். இதனால் நந்தினி பயத்தில் முழிக்க, விசாலாட்சி என்னன்னு நான் சொல்கிறேன் என உண்மையை கூறி விடுகின்றார்.


இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கதிர் நந்தினியை அறைந்து "களவாணி வேலை செய்றியா? மூணு பேரையும் தொலைச்சிப்புடுவேன்" எனக் கத்துகின்றார். பின்னர் முதியோர் இல்லத்தில் இருந்து போன் வர திட்டி போனை தூக்கி எறிகிறார் கதிர்.

பின்பு அவர்களை திட்டி விரட்டிவிடுகிறார் ரேணுகா. பதிலுக்கு நந்தினி "அங்க இல்லத்தில் எல்லாரும் சாப்பிடாம இருப்பாங்களே" எனக்கூறி அழுகின்றார். மறுபுறம் "எல்லாருக்கும் பயம் போயிடுச்சு. அதுக்கு காரணம் நீ தான்" என விசாலாட்சியை ஞானம் திட்டுகிறார். பதிலுக்கு "நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா தம்பி?" என ஈஸ்வரி ஞானத்திடம் கேட்கின்றார்.


அதற்கு ஞானம் "இனிமேல் நானும் ஆரம்பிச்சுட்டேன். நீங்க எல்லாம் மாறல. எல்லாருமா சேர்ந்து எங்க அண்ணனை வீட்டை விட்டு அனுப்பிட்டீங்க, இந்த வீட்ல இனிமேல் எல்லாமே ஆம்பளைங்க சொல்றது தான். எல்லாரும் பழைய வீட்ல இருந்தது போல திரும்பி மாறனும். இன்னும் இரண்டே நாளில் அண்ணன் வந்துடுவார். அதுக்குள்ள எல்லாரும் முடிவு எடுத்துக்கங்க" எனக் கூறி ஞானம் கத்துகின்றார்.

பின்னர் முதியோர் இல்லத்திலிருந்து வந்த மேற்பார்வையாளர் நந்தினியிடம் வந்து இன்னும் சாப்பாடு எடுத்து வரவில்லை ஏன் என கேட்கிறார்.  அவரையும் கதிர் கேவலமாக திட்ட பதிலுக்கு மேற்பார்வையாளர் "கைநீட்டி காசு வாங்கி இருக்காங்க. அட்வான்ஸ் கொடுத்து இருக்கோம். அதுக்கு யார் பதில் சொல்லுவா?" எனக் கேட்கின்றார். 


பிறகு நந்தினியைப் பார்த்து "நம்ப வைச்சு ஏமாத்திட்டீங்க இல்ல" என மேற்பார்வையாளர் கத்துகிறார். பிறகு அட்வான்ஸ் பணத்தை கேட்டதால் நந்தினி தாலி செயினை கழற்ற முயல உடனே விசாலாட்சி நந்தினியை அறைந்து "கட்டின புருஷன் குத்துகல் மாதிரி இருக்கிறான் நீ தாலியை கழற்ற" என்கிறார். 

பதிலுக்கு நந்தினி "என்ன பொறுத்த வரைக்கும் இது வெறும் செயின் தான். அவங்க எங்களுக்கு மரியாதை கொடுத்தா நாங்களும் கொடுப்போம். இது எங்க அப்பா போட்ட செயின். இதை என்ன வேணாலும் பண்ண எனக்கு உரிமை இருக்கு" என்கிறார். 

இதனை அவதானித்த முதியோர் இல்லத்திலிருந்து வந்த அந்த மேற்பார்வையாளர் "நாளை காலை வரை உங்களுக்கு டைம். அதுக்குள்ள பணத்தை கொடுக்கவில்லை என்றால் போலீஸோடு தான் வருவோம்" என கூறிவிட்டு செல்கின்றார். பின்னர் விசாலாட்சியை பார்த்து நந்தினி "உங்க பெரிய புள்ள காணாம போனது ஒரு ட்ராமா. எங்க வயித்து எரிச்சல், அங்க பசியோட இருக்காங்க பாருங்க அவங்களோட வயித்து எரிச்சல் எல்லாம் உங்களை சும்மா விடாது" என சாபமிட்டு செல்கின்றார்.


மறுபுறம் கதிர் ஜீவானந்தத்தின் மகள் வெண்பாவும் தாராவும் விளையாடுவதை பார்த்து யார் இந்த பொண்ணு என கேட்கிறார். பதிலுக்கு தர்ஷினி "இது எங்க அம்மாவோட பிரெண்டோட பொண்ணு " என்கிறார்.  பின்னர் கதிர் நந்தினியை அழைக்க அங்கு வந்த ஈஸ்வரி "என்ன இங்க சத்தம். என்ன ஆச்சு?" என கேட்கிறார். 

பதிலுக்கு கதிர் "எந்த பிரெண்டு? இது யாரோட  குழந்தை" என கேட்க, கரிகாலனும் சேர்ந்து கதிரை ஏத்தி விட கதிர் கத்துகின்றார். அதற்கு ஈஸ்வரி கதிரைப் பார்த்து "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என கூற "இது எங்க வீடு. அது எப்படி சம்பந்தம் இல்லை" என கதிர் கேட்கின்றார். இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement